செய்யாறில்மாவட்ட துணை செயலாளர் லோகநாதன் தலைமையில்கலைஞர் சிலை அருகே அன்னதானம் !

செய்யாறு, ஜன. 2 –
செய்யாறில் கலைஞர் சிலை அருகே மாவட்ட துணை செயலாளர் லோகநாதன் ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கப்பட்டது.

செய்யாறில் கடந்த 27ம் தேதி முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் திருவருவர் சிலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மறுநாள் முதல் சிலை அருகே தி.மு.க.,வைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் தினமும் ஒருவர் தலைமையில் அன்னதான வழங்கும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. நேற்று வடக்கு மாவட்ட துணை செயலாளர் லோகநாதன் ஏற்பாட்டில் அன்னதான வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. செய்யார் சட்டமன்ற உறுப்பினர் ஜோதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கி துவக்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து மாவட்ட துணை செயலாளர் லோகநாதன் 500க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு இனிப்பு அன்னதான வழங்கினார். இந்நிகழ்ச்சியில் நகர செயலாளர் விஸ்வநாதன், மாநில செயற்குழு உறுப்பினர் வெங்கடேஷ் பாபு, ஒன்றிய செயலாளர்களான என்.சங்கர், ரவிக்குமார், ஞானவேல், மாவட்ட அயலக அணி துணைத் தலைவர் எம்.கே.கார்த்திகேயன், மாவட்ட வளைகள் அணி அமைப்பாளர் ஞான செளந்தரி,  ராம்ரவி, கோவேந்தன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

செய்யாறில் புதியதாக திறக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் திருவுருவ சிலை அருகே, வடக்கு மாவட்ட துணை செயலாளர் லோகநாதன் ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஜோதி எம்.எல்.ஏ., சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அன்னதானத்தை துவக்கி வைத்தார்.