சங்கரன்கோவில், டிச.5 –
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கர நாராயண சாமி கோவிலில் கார்த்திகை தீபத்திருநாள் நடைபெற்றது. இதனை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை சண்முகர் சன்னதியில் உள்ள சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு சுவாமி சன்னதி, சங்கரலிங்க சுவாமி சன்னதி,அம்மன் சன்னதி ஆகிய சன்னதிகள் முன்பு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. இதனையடுத்து சுவாமி, அம்பாள் வீதி உலா நடைபெற்றது. இதில் கோவில் கண்காணிப்பாளர் ராஜகோபால் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை சங்கரன்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலர் செல்வன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் வேலுச்சாமி, வெள்ளத்துரை சுந்தர்ராஜ், ராமச்சந்திரன், ராஜேஷ் ஆகியோர் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை சங்கரன்கோவில் டவுன் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப் இன்ஸ்பெக்டர் பிரபா மற்றும் போலீசார் செய்து இருந்தனர்.











Leave a Reply