கடந்த சில நாட்களுக்கு முன்பு, மதுரை திருப்பரங்குன்றம் கோவிலில் தீபம் ஏற்றுவது தொடர்பாக பெரும் சர்ச்சை நடந்து கொண்டிருந்தது.

அதன் பின் இந்து அமைப்புகள் இந்த பிரச்சனையை உயர் நீதி மன்றத்திற்கு அவசர வழக்காக கொண்டு சென்றனர், இதனை விசாரித்த உயர் நீதிமன்ற நீதி அரசர்  ஜி.ஆர் சுவாமிநாதன்  நல்லதொரு தீர்ப்பை வழங்கினார், தற்போது அதனை கொச்சைப்படுத்தும் விதமாக சமூக வலைதளத்தில் வரைமுறை இல்லாமல், சிறிதளவு மரியாதை தராமல் ,ஒருமையில் பேசிய சேலத்தைச் சேர்ந்த பியூஸ் மானுஷ் மீது கோவையை சேர்ந்த சமூக ஆர்வலர்  சோஷியல் சூர்யா  , பியூஸ் மானுஷ் மீது ஆன்லைன் வாயிலாக  புகார் அளித்துள்ளார். அதில் கையில் கைபேசி ஒன்று இருந்தால் யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் தரகுறைவாக பேசலாமா என்று வினாவியுள்ளார் , ஒரு நீதி அரசரை எப்படி இது போல் பேசலாம் ? இவரை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதே போல் இந்த நபர்  காவலர்களையும் ஒருமையிலும் தகாத வார்த்தையிலும் பேசி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.