
Lவேலூர், ஜன.2-
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு நகராட்சி 18வது வார்டில் என் சாவடி என் வெற்றிச் சாவடி தலைப்பிலான திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மூத்த நகர மன்ற உறுப்பினர் டி. அப்துல் ஜமீல் தலைமை தாங்கினார். 18வது வார்டு நகர மன்ற உறுப்பினர் கே. தேன்மொழி தாஸ் வரவேற்றார். இதில் பேரணாம்பட்டு நகர மன்றத்தை கடந்த 20 ஆண்டுகளாக திமுகவின் கோட்டையாக வைத்துக் கொண்டிருக்கும் திமுக நகர செயலாளரும், நகர மன்ற துணைத் தலைவருமான ஆழியார் ஜூபேர் அகமது சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் நகர மன்ற தலைவர் வி. பிரேமா வெற்றிவேல், நகர திமுக துணை செயலாளர் பி. சின்னா (எ) பொற்கைப் பாண்டியன், வேலூர் மாவட்ட திமுக துணை செயலாளர் எம். பிரபாத்குமார், நகரமன்ற உறுப்பினர்கள் எஸ். நுரேசபா அர்சத் அகமத், எல். சின்ன லாசர், எம்.பாரதி , நஜீஹா ஜூபேர் அஹமத் ,எஸ். இந்திரா காந்தி சரவணன், முன்னாள் நகர மன்ற உறுப்பினர்கள் கே. ராஜவேலு, சித்திக் அகமத், ஜெ. கங்காதரன் உட்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.










Leave a Reply