வேலூர்,நவ.21-
வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அனுகுலாஸ் ரெஸிடென்சியில் SIR குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு திமுகவின் வேலூர் மாவட்ட செயலாளரரும், அணைக்கட்டு தொகுதி எம்எல்ஏவுமான ஏ.பி.நந்தகுமார் தலைமை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு SIR பணிகள் குறித்து ஒன்றிய செயலாளர்கள், தேர்தல் ஒருங்கிணைப்பாளர்களிடம் களநிலவரம் எப்படி உள்ளது என்று கேட்டறிந்தார். பின்னர் பல்வேறு ஆலோசனைகளை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார். இதில் வேலூர் மாநகர செயலாளர் ப.கார்த்திகேயன் எம்எல்ஏ, மாவட்ட அவைத்தலைவர் தி.அ.முகமது சகி, குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு மற்றும் வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ,ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழக செயலாளர்கள், தேர்தல் ஒருங்கிணைப்பாளர்கள், திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.











Leave a Reply