செய்யாறு, மார்ச் 2-
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி நேற்று வெம்பாக்கம் தி.மு.க., கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட மாங்கால் கூட்டுரோடு பகுதியில் ஒன்றிய செயலாளர் என்.சங்கர், மாவட்ட அயலக அணி துணைத் தலைவர்
எம்.கே.கார்த்திகேயன் ஆகியோரது ஏற்பாட்டில் 1000 பேருக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.


மார்ச் 1ம் தேதி (நேற்று) தமிழக முதல்வரின் பிறந்தநாளையொட்டி நாடு முழுவதும் கழக பொறுப்பாளர்கள் நிகழ்ச்சிகள் மூலம் விழா எடுத்து கொண்டாடினர். செய்யாறு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட வெம்பாக்கம் கிழக்கு ஒன்றிய செயலாளர் என்.சங்கர், மாவட்ட அயலக அணி துணை தலைவர் எம்.கே.கார்த்திகேயன் ஆகியோரது ஏற்பாட்டில் மாங்கால் கூட்டுரோட்டில், பொதுமக்கள் 1000 பேருக்கு வேட்டி – சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர். அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் லோகநாதன், தி.மு.க., பொறுப்பாளர்களான பாபு, ராமலிங்கம், ஏகாம்பரம், லோகநாதன், ஷர்மா, பிரபு, ஜெகநாதன், சேகர், மனோகர், பெருமாள் மற்றும் இளைஞரணி பொறுப்பாளர்கள் என, 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.










Leave a Reply