*சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான பணிகள் நடைபெறும்சிறப்பு உதவி மையங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு*

அரியலூர் மாவட்டம், 149-அரியலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்த பணிக்கான நிரப்புவது தொடர்பாகவும், வாக்காளர்களிடமிருந்து கணக்கெடுப்பு படிவங்களை மீள பெற ஏதுவாகவும் ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு உதவி மையங்களில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி,  இன்று (22.11.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அரியலூர் நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரியலூர் தூய மேரி உயர்நிலைப்பள்ளி, அரியலூர் (மேற்கு) ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் வாக்களார்கள் அவரவர் வாக்களிக்கும் வாக்குசாவடி மையங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு உதவி மையங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு வாக்காளர்களிடமிருந்து கணக்கெடுப்பு படிவங்கள் மீள பெறப்படும் பணிகள் குறித்து கேட்டறிந்து, வாக்காளர்கள் கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்வதற்கு எழுப்பும் சந்தேகங்களுக்கு தெளிவாக பதிலளிக்க வேண்டும் எனவும், மேலும், வாக்காளர்களால் வழங்கப்பட்ட பூர்த்தி செய்யப்பட்ட கணக்கெடுப்பு படிவத்தினை விடுபடாமல் எவ்வித பிழையுமின்றி துல்லியமாக வாக்குச் சாவடிநிலை அலுவலர் செயலியில் பதிவேற்றம் செய்திட சம்மந்தப்பட்ட பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்