வேலூரில் விஐடி பல்கலைக்கழக  வளாகத்தில்  மாற்றுத்திறனாளிகள் தின விழா:  ரூ.1.41 கோடி மதிப்பில் 341 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்!

வேலூர்,டிச.4-
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, விஐடி பல்கலைக்கழக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்றுத்திறனாளிகள் தின விழாவை முன்னிட்டு, ரூ. 1.41 கோடி மதிப்பில், 341 மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ப.கார்த்திகேயன், குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு, வேலூர் மாநகராட்சி துணை மேயர் எம்.சுனில்குமார், மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாபு, அரசு துறை சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பயனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.