கோவை மாவட்டம்

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதி சுல்தான்பேட்டை மேற்கு ஒன்றியத்துக்குட்பட்ட வாரப்பட்டி ஊராட்சி, வடவள்ளி ஊராட்சி, பச்சாபாளையம் ஊராட்சி, பாப்பம்பட்டி ஊராட்சி ஆகிய ஊராட்சிகளில் 3 கோடியே 66 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கு கோவை தெற்கு மாவட்ட கழக செயலாளர் தளபதி முருகேசன் அவர்கள் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். அதைத்தொடர்ந்து இது நம்ம ஆட்டம் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு பரிசு பொருள்களை வழங்கி சிறப்பித்தார். மேலும் வாரப்பட்டி ஊராட்சி V.சந்திராபுரம் கிராமத்தில் கட்டப்படும் கலைஞர் கனவு இல்ல திட்ட வீடுகளுக்கு செல்ல புதிய தார் சாலை அமைக்க நிர்வாக அனுமதி வழங்கிய கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் அவர்களுக்கு அந்தப் பகுதி மக்கள் அவர்களது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் சுல்தான்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ், முன்னாள் துணை பெருந்தலைவர் மனோகரன், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் கண்ணன், மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் பத்மாவதி, ஒன்றிய துணை செயலாளர் மாரிமுத்து, ஒன்றிய பொருளாளர் காளிமுத்து, வாரப்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கவிதா தர்மராஜ், முன்னாள் கவுன்சிலர் விஜயகுமார், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் விவேக், ஒன்றிய மீனவர் அணி அமைப்பாளர் ராமச்சந்திரன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் கோவிந்தராஜ், கிளை செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.