இந்திய நாட்டின் 77 வது குடியரசு தின நிகழ்வு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ஐக்கிய ஜமாஅத் பேரவையின் சார்பாக இனிதே நடைபெற்றது

காட்டூர் பள்ளிவாசலின் முத்தவல்லி முஹம்மது ஹனிபா அவர்கள் தலைமை ஏற்க
தாருஸ்ஸலாம் காட்டூர் கபருஸ்தான் பள்ளிவாசல் பேஷ்இமாம் அபூதாஹீர் பாகவி அவர்கள் கிராஅத் ஓதிஓதினர்
ஐக்கிய ஜமாஅத் பேரவையின் செயலாளர் அக்பர் அலி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த
ஐக்கிய ஜமாஅத் பேரவையின் தலைவர் முஹம்மது ஷரீஃப் அவர்கள் கொடியேற்றி உரை நிகழ்த்த முஹம்மது முஹையித்தீன் சிராஜி ஹஜ்ரத் அவர்கள் வாழ்த்துரை நிகழ்த்தினார்கள்
முஹ்யித்தீன் அப்துல் காதிர் சிராஜி ஹஜ்ரத் அவர்கள் சிறப்புரையாற்றிட ஐக்கிய ஜமாஅத் பேரவையின் துணை செயலாளர் ஜனாப் அய்யூப் அவர்கள் நன்றியுரை நிகழ்த்த பெரிய பள்ளிவாசல் பேஷ்இமாம் கலீபுல்லாஹ்பாஜில்பாகவி அவர்கள் துஆ ஓதி தேசிய கீதம் இசைக்கப்பட்டு குடியரசு தின விழா இனிதே நிறைவு பெற்றது.
காட்டூர் பள்ளிவாசல் தலைமைஇமாம் முஹம்மது இல்யாஸ் பாகவி ஹஜ்ரத். அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்
இந்நிகழ்விலே மேட்டுப்பாளையம் அனைத்து பள்ளிவாசல் நிர்வாகப் பெருமக்களும் உலமா பெருமக்களும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்