கோவை மாவட்டம்மேட்டுப்பாளையம் நகர மன்ற தலைவருக்கு தமிழக வக்ஃப் வாரிய உறுப்பினர் பொறுப்பு

கோவை, மேட்டுப்பாளையம்:
தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் புதிய நிர்வாகம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், மேட்டுப்பாளையம் நகராட்சியின் தலைவராக செயல்பட்டு வரும் மெஹரிபா பார்வின், அசரப் அலி அவர்கள்,
தமிழ்நாடு வக்ஃப் வாரிய உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மாநில அளவிலான முக்கிய நிர்வாக அமைப்பான வக்ஃப் வாரியம் —
நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசுத் துறை உயர் அதிகாரிகள், இஸ்லாமிய அறிஞர்கள் ஆகியோரைக் கொண்ட எட்டு பேர் கொண்ட மாநில வாரியம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அத்தகைய உயர்ந்த நிர்வாக அமைப்பில்
மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த நகர மன்ற தலைவர் இடம்பெற்றிருப்பது,
இந்த பகுதியின் சமூக-நிர்வாக வலிமைக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகும்.

தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தில் பெண்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று உறுப்பினர்களில்,

1. கவிஞர் சல்மா, நாடாளுமன்ற உறுப்பினர்

2. மெஹரிபா பார்வின், மேட்டுப்பாளையம் நகர மன்ற தலைவர்

3 பாத்திமா முசாபர் மாநகராட்சி மன்ற உறுப்பினர்

ஆகியோர் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்
.
இந்த சிறப்பு வாய்ந்த பொறுப்பு மேட்டுப்பாளையத்திற்கு கிடைத்த சிறப்பான பெருமை
பெண்கள் முன்னேற்றத்திற்கான மாநில அரசின் உறுதியான நடவடிக்கைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

மேட்டுப்பாளையம் நகர மன்ற தலைவராக சிறப்பாக பணியாற்றி வரும் மெஹரிபா பார்வின்,
வக்ஃப் சொத்துகள், பள்ளிவாசல்கள், மத்ரஸாக்கள், சமூக நல சேவைகள் உள்ளிட்ட துறைகளில்
சிறுபான்மை மக்களின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் பணிபுரிவார் என்ற நம்பிக்கை சமூகத்தில் நிலவுகிறது.

தமிழக அரசும், வக்ஃப் வாரியமும்
மேட்டுப்பாளையம் நகரத்தின் பிரதிநிதிக்கு இந்த உயர்ந்த பொறுப்பை வழங்கியிருப்பதற்கு
மக்கள் மனமார்ந்த நன்றியும் வாழ்த்துகளும் தெரிவித்து வருகின்றனர்.

அடுத்த ஐந்து ஆண்டுகள் இவர்களது பதவிக்காலம் சிறப்பாக அமைய
எல்லா தரப்பினரும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.