கோவை மாவட்டம்

🚩கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் உள்ள திருச்சி சாலையில் உள்ள தனியார் KMCH மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளியுடைய வாகனங்கள், பார்வையாளருடைய வாகனங்கள், மருத்துவர் உடைய வாகனங்கள், மருத்துவ உதவி செய்யும் நபர்களுடைய வாகனங்கள் நிறுத்துவதற்கு
இட வசதி இல்லாத காரணத்தினால், மருத்துவமனை முன்பாக உள்ள திருச்சி சாலையில், இரண்டு புறமும் எண்ணற்ற நான்கு சக்கரம், இரண்டு சக்கர வாகனங்கள், நிறுத்தப்படுகிறது. அவ்வாறு நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களால், திருச்சி சாலைகள் இரண்டு புறமும் மிகப்பெரிய போக்குவரத்து நெருக்கடி ஆகி அனுதினமும் பத்துக்கு மேலான விபத்துகள் அந்தப் பகுதியில் நடைபெறுகிறது. மேலும்
அந்த மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு உரிய வாகன நிறுத்தம் ஏற்படுத்தாமல், நோயாளிகளையும் பார்வையாளர்களையும் மிகப்பெரிய அலைக்கழிப்பு செய்து மன உளைச்சலை ஏற்படுத்துவது குறித்தும்
மேலும் பாதசாரிகள் அந்த பகுதியில் நடந்து செல்வது என்பது உயிருக்கு உரிய உத்தரவாதம் இல்லை. என்று வீர இந்து சேவா இயக்கம் சார்பாக மனு கொடுத்து, கோவை மாவட்ட காவல் துறை கண் காணிப்பாளர்அவர்கள், கருமத்தம் பட்டி துணை கண் காணிப்பாளர் அவர்கள், மற்றும் சூலூர் காவல் ஆய்வாளர் அவர்கள் என அனைவரின் சிறப்பான செயல் பாட்டால், தற்போது இணைப்பில் உள்ள புகைப்படம் மூலம் KMCH மருத்துவ மனை முன் பகுதியில் நிறுத்தம் செய்யும் வாகனங்களை மருத்துவ மனை உள் பகுதியில் நிறுத்தம் செய்யும் , பார்க்கிங் கட்டணம் 10 ரூபாய் என சிறப்பான செயல் முறை ஏற்பட்டு உள்ளது. இது சூலூர் பொது மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்று உள்ளது. மேலும் பொது மக்களின் நலன் கருதி, KMCH மருத்துவ மனை நிர்வாகத்திடம் பேசி, வாகன நிறுத்தம் செய்து கொடுத்த, கோவை மாவட்ட காவல் துறை கண் காணிப்பாளர் திரு. டாக்டர் கார்த்திகேயன் ஐயா அவர்களுக்கும், கோவை மாவட்ட துணை கண் காணிப்பாளர் திரு. கரிகால் பாரி சங்கர் ஐயா அவர்களுக்கும், சூலூர் காவல் நிலைய முன்னாள் ஆய்வாளர் திரு. செல்வ ராகவன் ஐயா,மற்றும் சூலூர் காவல் ஆய்வாளர் திரு. பிரேம் ஆனந்த் ஐயா மற்றும் துணை ஆய்வாளர்கள் மற்றும் அணைத்து காவலர்களுக்கும், மற்றும், மருத்துவ மனை வரும் நபர்களுக்கு உரிய வாகன நிறுத்தம் செய்து கொடுத்த KMCH நிர்வாகத்திற்கும் சூலூர் வாழ் பொது மக்கள் சார்பாகவும், வாகன ஓட்டிகள் சார்பாகவும், வீர இந்து சேவா சார்பாக வும், மிகப்பெரிய நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.
என்றும் மக்கள் பணியில்!!
🚩வீர இந்து சேவா 🚩