கோவை மாவட்டம் ஹோப் காலேஜ் மணி மஹாலில் ஆதித்தமிழர் முன்னேற்ற கழகம் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது இதில்,
அ. நாகராஜன் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார்
எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் ஆதித்தமிழர் முன்னேற்ற கழகம் யாருக்கான ஆதரவை தரப் போகிறது, என்ற நிலைபாட்டை முடிவெடுத்து அறிவிப்பை வெளியிட உள்ளது. கடந்த 2021ல் இருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆதரித்து வருகின்ற எங்களது அமைப்பு வருகின்ற 2026லும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆதரித்து அதன் வெற்றிக்கு உழைத்து மரியாதைக்குரிய எடப்பாடி முதலமைச்சர் ஆக்குவது இந்த பொதுக்குழுவில் எடுத்திருக்கின்ற சிறப்பு தீர்மானம் ஆகும். அதற்கு என்ன அடிப்படை காரணம் என்றால் தமிழகத்தில் வாழக்கூடிய பட்டியல் சமூகம் 60 லட்சம் மேலான வாக்குகளை கொண்ட அருந்ததிய சமூகத்திற்கு திராவிட முன்னேற்றக் கழகம் செய்திருக்கக்கூடிய அநீதிகளை தாண்டி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் பல நல்ல திட்டங்களை செய்து வருகிறார்கள். உதாரணத்துக்கு சொல்ல வேண்டும் என்று சொன்னால் அருந்ததிய சமூகத்தில் பிறந்திருக்கின்ற சுதந்திர போராட்ட வீரர்கள் ஒண்டிவீரருக்கு நெல்லையில் கம்பீரமான மணிமண்டபத்தை அமைத்து தந்தது அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், சிவகங்கை ஆண்ட வேலுநாச்சியார் படைத்தளபதியாக இருந்த குயிலி அவர்களுக்கும் நினைவுச்சின்னம் எழுப்பியதும் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், அதேபோலதான் 2021 இல் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் எங்கள் அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட மாநாட்டில் அன்றைக்கு முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி அந்த மானத்தை சிறப்பு செய்ததோடு இன்றைக்கு ஈரோட்டில் கட்டப்பட்டிருக்கின்ற பொல்லான் மணி மண்டபத்தை கட்ட அரசாணை வெளியிட்டார். அதைப்போல தூய்மை பணியாளர்களுக்கான நலத்திட்டங்கள் பல அவர்கள் செய்திருக்கிறார்கள். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் கிராமப்புற பகுதியில் இருக்கும் தூய்மை பணியாளர்கள் முன்பெல்லாம் எந்த பாதுகாப்பும் கிடையாது இப்போது 50,000 அவர்கள் ஓய்வு பெறும்போது மாதாமாதம் 2000 ஊக்கத்தொகை என்று எடப்பாடி யார் அறிவித்தார். அருந்ததி சமூகத்திற்கு குறிப்பாக பட்டியல் சமுதாயத்திற்கு வீடு இல்லாதவர்களுக்கு வீட்டுக்கான மனை இல்லம் பெற்று அவர்களுக்கு வீடு கட்டி கொடுத்தவர். எடப்பாடி யார் அவர்கள் முதலமைச்சராக இருக்கும்போது தான் அருந்திய சமூகத்திற்கான இட ஒதுக்கீடு சரிதான் என்று உறுதிப்படுத்தியவர். அருந்ததியர் இட ஒதுக்கீடு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வந்த போது எடப்பாடி அவர்கள் முதலமைச்சராக இருக்கிறபோதுதான் அந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பில் முறையான வழக்கறிஞரை அனுப்பி இன்றைக்கு ஏழு பேர் கொண்ட அமர்வு அருந்ததி மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்ற இட ஒதுக்கீடு சரிதான் என்ற தீர்ப்பை உறுதிப்படுத்தியவர் எடப்பாடியார்அந்த வகையில் தான் வருகின்ற 2026 சட்டப்
பேரவை தேர்தலில் ஆதித்தமிழர் முன்னேற்ற கழகம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆதரிப்பது என்று இந்த சிறப்பு தீர்மானத்தை இன்றைக்கு நாங்கள் நிறைவேற்றி இருக்கிறோம் என்று இன்றைக்கு ஆண்டு கொண்டிருக்கிற திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் ஆட்சி பொறுப்பு ஏற்ற காலம் தொட்டு இதுவரை 60க்கும் மேற்பட்ட அருந்ததியர் சமூக மக்கள் மட்டும் படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று ஏறக்குறைய 150கும் மேற்பட்ட படுகொலைகள் தமிழ்நாட்டில் நடந்திருக்கிறது. அது மட்டும் அல்லாமல் எங்கு திரும்பினாலும் கஞ்சா போதை போன்ற இதைப்போன்ற பொருள்களால் சட்ட ஒழுங்கு சீரழிந்து இன்றைக்கு குழந்தைகள் பெண்கள் யாருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் தமிழகத்தில் நிலவி வருகிறது அதற்கும் நாங்கள் இந்த நேரத்திலே திராவிட முன்னேற்றக் கழக அரசை கண்டித்து கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதுபோன்று ஏறக்குறைய 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது. ஆகவே இதை ஊடகத்தின் வாயிலாக நீங்கள் செய்தியாக்கி தரவேண்டும் என்று உங்களை எல்லாம் அன்போடு கேட்டு.
திமுக சமூகநீதி நிலை
நாட்டும் கட்சி என்று கூறிக் கொள்கிறது அது பற்றி
ஒவ்வொரு முறையும் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய முதலமைச்சர் அவர்கள் இது சமூக நீதி ஆட்சி என்று சொல்லுகிறார் உண்மையான சமூக நீதி என்றால் என்ன செய்திருக்க வேண்டும் உச்ச நீதிமன்றம் அருந்ததியர் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டவுடன் வகைப்படுத்துதல் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாநிலத்திற்கும் அவர்களுக்கு மக்கள் தொகை ஏற்றவாறு நீங்கள் இட ஒதுக்கீடை வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும் இதுவரை கிடப்பில் போட்டு வைத்திருக்கிறார். அது மட்டுமல்லாது பட்டியல் சமூகத்திற்கு ஒதுக்கப்பட்டு இருக்கின்ற நிதிகள் இதுவரை செலவிடப்படவில்லை, தொடர்ந்து பட்டியல் சமூகம் அவமதிக்கப்படுவது இன்றைக்கும் நீடிக்கப்பட்டு வருகிறது. அண்மையில் கூட கொல்லானை பற்றி நாடாளுமன்ற அவையில் வைத்து இன்றைக்கு இருக்கக்கூடிய மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா அவர்கள் மிகவும் கொச்சையான வார்த்தையை பயன்படுத்தி கேவலமாக பேசி இருக்கிறார். அதற்கு முன்பாக ஆர் ராசா என்பவர் நீலகிரி தொகுதியின் உடைய நாடாளுமன்ற உறுப்பினர் அவரும் அருந்ததிய மக்களை மலம் அள்ளும் சாதி மைனாரிட்டி சாதி என்றெல்லாம் கொச்சைப்படுத்துகிறார். இப்படி தொடர்ந்து அவர்கள் மக்களை அவமானப்படுத்துவது ஏமாற்றுவது வஞ்சிப்பது என்பது திமுகவின் கைவந்த கலை ஆகவே அவர்கள் சமூகநீதி ஆட்சி என்று சொல்வதில் எந்தவித நியாயமும் இல்லை ஆகவே அதை நாங்கள் எதிர்க்கிறோம்.
தூய்மை பணியாளர்கள் தொடர்ந்து போராட்டம் செய்து கொண்டிருக்கிறார்கள் அது பற்றி
அவர்கள் வைத்துள்ள இரண்டு கோரிக்கைகள் முதலாவது எங்களுடைய பணியை நிரந்தரம் படுத்த வேண்டும் இன்னொன்று எங்களுக்கு முறையான ஊதியம் வழங்க வேண்டும் இதுதான் கோரிக்கை. ஆனால் தேர்தலின் போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மரியாதைக்குரிய ஸ்டாலின் அவர்கள் அன்றைக்கு சொன்னார் தூய்மை பணியாளருடைய கோரிக்கையை நிறை
வேற்றி தருவேன் என்று சொல்லிவிட்டு இன்றைக்கு அவர்களை ஒடுக்குமுறைக்கு உள்ளாக்குகின்ற போக்கில் திமுக மிகப்பெரிய அராஜகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. கிராமம் கிராமமாக, வீதி வீதியாக சென்று ஆதித்தமிழர் முன்னேற்ற கழகம் திமுகவை படுதோல்வி அடைவதற்காகவும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கட்டில் அமர்வதற்கான களப்பணியை எங்களிடம் இருக்கக்கூடிய களப்பணியாளர்கள் 2000 பேர் களத்தில் இறங்கி பணியாற்றுவோம் என்பதை மட்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.
விஜய் திமுகவை தீய சக்தி என்று கூறுகிறார் அது பற்றி :
நம்மை பொருத்தவரை விஜய் ஒரு நல்ல நடிகர் அவரை எல்லோரும் இளைஞர்கள் இளம்பெண்கள் எல்லோரும் ரசிக்கிறார்கள். ஆனால் திரைத்துறையில் இருந்து வருகின்ற ரசிகர் மன்றங்கள் வேறு நல்லாட்சியை தருகின்ற போக்கு சினிமாத்தனமாக இருந்து விடக்கூடாது. இங்கே இருக்கக்கூடிய குறிப்பாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் இன்று விஜய் சொல்லுகின்ற அத்தனை செயலையும் செய்திருக்கிறார்கள். திமுக இந்த மக்களை ஏமாற்றுகிறது. விஜய் ஒருபோதும் இங்கு தமிழகத்தில் அவர் காணுகிற கனவு நிறைவேறாது இங்கு மீண்டும் அதிமுக தான் ஆட்சி அமைக்கும்.











Leave a Reply