கோவை மாவட்டம்

கோவை மாநகர் போத்தனூர் காவல் நிலையம் சார்பில் போத்தனூர் செட்டிபாளையம் ரோட்டில் ஈச்சனாரி பிரிவு அருகே புதியதாக காவல் சோதனை சாவடி கட்டப்பட்டுள்ளது மேலும் ஈச்சனாரி பிரிவில் கேமரா கண்காணிப்பு கேமரா மற்றும் காவல் சோதனை சாவடி கட்டடம் திறப்பு விழா
போத்தனூர் உதவி ஆணையர் கனகசபாபதி எம். ஏ. அவர்கள் முன்னிலையிலும் கோவை மாநகர் காவல்துணை ஆணையர் தெற்கு கார்த்திகேயன் பி.இ. எம் .சி. அவர்கள் தலைமையில் கட்டிடத்தை திறந்து வைத்து கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் ஐ.பி.எஸ் அவர்கள் சிறப்புரையாற்றினார். மேலும் இவ்விழாவில் கோவை மாநகர உயர் காவல் அதிகாரிகளும் காவல் நண்பர்கள் ,அரசு அதிகாரிகள், இந்த கட்டிடம் சிறப்புற உதயமாக காரணமான நல்லுள்ளங்கள் மற்றும் நகர் பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்
இந்த விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்த அசோக் குமார் காவல் ஆய்வாளர்.
போத்தனூர் காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள்.