கோவை வனக்கோட்டம் மேட்டுப்பாளையம் வனசர பகுதியில்
13 முதல் 15 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு ஆண் யானை இறந்து அழுகிய நிலையில் மேட்டுப்பாளையம் வனத்துறைக்கு வந்த தகவலின் அடிப்படையில் கோவை மாவட்ட வன பாதுகாவலர் வெங்கடேஷ் மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் அறிவுறுத்தலின் பேரில் வனசரக அலுவலர் சசிகுமார் தலைமையில் விசாரணை மேற்கொண்டனர்
மேலும் வன உயிரின மருத்துவ குழுவுக்கு தகவல் கொடுக்கப்பட்டது விரைந்து வந்த மருத்துவ குழுவினர் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்து மாதிரிகளை சேகரித்தனர் சேகரிக்கப்பட்ட உடற் கூர் ஆய்வு மாதிரிகளை கோவை மற்றும் சென்னை ஆய்வுக்கூடங்களுக்கு அனுப்பப்பட்டது நிகழ்வில் வருவாய்த் துறையினர், காவல்துறையினர், மின்வாரியத்துறையினர்,வன உயிரின ஆர்வலர்கள் உடன் இருந்தனர்











Leave a Reply