
வேலூர், டிச. 26-
வேலூர் மாவட்டம், காட்பாடி விருதம்பட்டு தென்னிந்திய திருச்சபை வேலூர் பேராயம் ஆல்காட் நினைவாலயத்தில் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்துமஸ் நற்கருணை வழிபாடு வழிகாட்டும் நம்பிக்கையின் ஒளி என்ற தலைப்பில் தலைமை ஆயர் டி. எஸ். சி. மேனன் கிறிஸ்துமஸ் செய்தியினை பங்கு மக்களுக்கு வழங்கினார். இதைத் தொடர்ந்து மெழுகினை ஒளிரச் செய்தார்கள் தலைமை ஆயரின் குடும்பத்தினர். கிறிஸ்துமஸ் நன்றி காணிக்கை உரைகளை இந்த வழிபாட்டில் வைத்து படைத்தனர் .அதிகாலை 5 மணிக்கு இந்த கிறிஸ்துமஸ் நற்கருணை வழிபாடு நடந்தது. இதை தொடர்ந்து காலை 9 மணி அளவில் இணை ஆயர் சாமுவேல் கெம்பீரம் தேவ செய்தியை வழங்கினார். இதைத்தொடர்ந்து மெழுகினை இணை ஆணையரின் குடும்பத்தினர் ஒளிரச் செய்தனர். இதை தொடர்ந்து கிறிஸ்துமஸ் நன்றி காணிக்கை முறைகளை இந்த வழிபாட்டில் வைத்து படைக்கப்பட்டது. இதை தொடர்ந்து ஏழை, எளியவர்கள், சாலையோரம் வசிப்பவர்கள் ஆகியோருக்கு இலவசமாக வேட்டி, சேலைகள் மற்றும் புத்தம் புதிய துணி வகைகளை அளித்து அவர்களுக்கு பிரியாணி விருந்தும் அளித்து உபசரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த ஆல்காட் நினைவாலயத்தில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தலைமை ஆயரும், இந்த நினைவாலயத்தின் தலைவருமான டி. எஸ். சி .மேனன் மற்றும் ஆயர் சாமுவேல் கெம்பீரம் மற்றும் செயலர் கிறிஸ்தோபர் வேதக்கண், பொருளாளர் ராஜன் ஆகியோர் வெகு விமரிசையாக செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.










Leave a Reply