சென்னை வர்த்தக மையக் கண்காட்சியில்  லூமினஸ் வெளிப்படுத்தியபுதுப்பிக்கத்தக்க ஆற்றல் தீர்வு!

நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் கண்காட்சியில் லூமினஸ் சோலார் பங்கேற்று, தமிழ்நாட்டில் தூய்மையான ஆற்றல் பயன்பாட்டை விரைவுபடுத்தும் நோக்கில் தனது சமீபத்திய சோலார் மற்றும் எரிசக்தி சேமிப்பு தீர்வுகளை அறிமுகப்படுத்தியது.
லூமினஸ் அரங்கத்தை தென்னிந்தியா தலைவரான  சுஜித் ராயிரத்  திறந்து வைத்தார். அவர் வீடுகளுக்கும் வணிகங்களுக்கும் நிலைத்த மற்றும் நம்பகமான ஆற்றல் தீர்வுகளை வழங்குவதில் நிறுவனத்தின் உறுதிப்பாட்டை எடுத்துரைத்தார். தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை தமிழ்நாடு கிளை மேலாளர்  டி.கார்த்திகேயன்  தலைமையில நடத்தினார். மாநிலத்தில் லூமினஸ் சோலாரின் விரிவாக்கம் மற்றும் வாடிக்கையாளர் அணுகலை வலுப்படுத்தும் நோக்கத்தை அவர் வலியுறுத்தினார்.
மூன்று நாட்கள் நடைபெற்ற இந்தக் கண்காட்சி, டீலர்கள், நிறுவனர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இது இந்தப் பகுதியில் சோலார் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தீர்வுகளுக்கான தேவை அதிகரித்து வருவதை வெளிப்படுத்துகிறது.