ஐயப்ப பக்தர்கள் சென்ற கார் சென்டர் மீடியனில் மோதி விபத்து: இருவர் படுகாயம்!

வேலூர்,டிச.5-
மகாராஷ்டிரா மாநிலம், பூனாவைச் சேர்ந்தவர்கள் கேரளாவில் ஐயப்ப சுவாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் பூனாவுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். வேலூர் மாவட்டம் ,காட்பாடி வழியாக திருப்பதி செல்லும் போது காட்பாடி காவல் நிலையம் எதிரே வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் இருந்த சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருவர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் காப்பாற்றி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் காட்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.