வேலூர்,டிச.25-
கர்நாடக மாநிலம், சிக்பலாபூரில் உள்ள C.S.I. கிறிஸ்து சர்ச்சில், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்து பிறப்பை பிரதிபலிக்கும் வகையில் மிகச் சிறப்பான கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கிறிஸ்துமஸ் குடில் படகு வடிவமைப்பில், ரூ.3 லட்சம் செலவில் அழகாக உருவாக்கப்பட்டுள்ளது. மூங்கில் மற்றும் இயற்கை பொருட்களை பயன்படுத்தி கட்டப்பட்ட இந்த குடில், 22 அடி உயரத்தில் அமைக்கப்பட்டு, மின் அலங்காரங்களுடன் கண்கவர் வகையில் ஜொலிக்கிறது.
இந்த சிறப்பான கிறிஸ்துமஸ் குடிலை சங்கமேஸ், அருண் எல்சின், அபினோ சுபீஸ், றாபின் ஆன்றணி, பென்னெட், அஜின், சிதானந்த், வின்சன் மற்றும் அசோக் ஆகியோர் இணைந்து சிறப்பாக வடிவமைத்துள்ளனர்.
மேலும், இந்த குடிலின் கட்டமைப்பு மற்றும் வடிவமைப்பு பணிகளுக்கு வேலூர் மாவட்டம், குடியாத்தம், பாரத் எலக்ட்ரானிக் நிறுவன உரிமையாளர் பிரவீன் குமார் மற்றும் அவருடைய தொழிலாளர்கள் முழுமையான உதவியை வழங்கினர்.
இந்த குடில் அமைவதற்காக C.S.I. கிறிஸ்து சர்ச்சைச் சார்ந்த போதகர் Rev.பிரவீன், டீக்கனர் சந்தீப் மற்றும் பிரபு ஆகியோர் மிகச் சிறப்பான ஒத்துழைப்பையும், ஆதரவையும் அளித்து நன்றியையும் தெரிவித்தனர்.
சிக்பலாபூரில் குடியாத்தம் பாரத் எலக்ட்ரானிக் நிறுவனம் ரூ.3 லட்சம் செலவில் கிறிஸ்துமஸ் குடில் அமைப்பு!










Leave a Reply