வேலூர், டிச. 21-
வேலூர் மாவட்டம், குடியாத்தம் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தல் நடந்தது. தேர்தலில் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்ட வழக்கறிஞர்கள் சங்கத் தலைவராக வி. ரஞ்சித்குமார் பொறுப்பேற்றுக் கொண்டார். துணைத் தலைவர் எஸ். தேவராஜ்,
செயலாளர் கே. இளங்கோ, இணை செயலாளர் கே .பி. கோபி, பொருளாளர் கே. தியாகு, ஆடிட்டர் டி. சங்கர்வடிவேல், நூலகர் ஆர்.இ. சரவணகுமார் ஆகியோர் பார் அசோசியேஷன் வழக்கறிஞர்கள் வாக்களித்து மேற்கண்ட வழக்க றிஞர்களை சங்க நிர்வாகிகளாக தேர்ந்தெடுத்தார்கள். வழக்கறிஞர்கள் அனைவரும் சேர்ந்து புதிய நிர்வாகிகளை வரவேற்று மகிழ்ந்தனர். மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 193, பதிவான வாக்குகளின் எண்ணிக்கை 173, என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் அலுவலராக வழக்கறிஞர் இ.ரமேஷ் செயல்பட்டார்.











Leave a Reply