செந்துறை மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம் செந்துறை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் பள்ளியின் தலைமை ஆசிரியர் வி.சுமதி தலைமையில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது இதில் வண்ண வண்ண கோலங்கள் இட்டு, குத்து விளக்கு ஏற்றி, செங்கரும்பு,மஞ்சள் கொத்து,வெல்லம் ஆகியவற்றை மண் பானையில் பொங்கல் வைத்து பொங்கலோ பொங்கல் என கோஷம் எழுப்பி படைத்தனர். பள்ளியில் உள்ள இரு பால் ஆசிரியர்கள் பொங்கல் பானைகள் வைத்து சுத்தியும் ஆசிரியர்கள் கும்மி அடித்து பொங்கலை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர் மற்றும் மாணவி செல்வங்களுக்கு சக்கரை பொங்கல் வழங்கி பொங்கல் விழாவை மிகவும் சிறப்பாக மகிழ்ச்சியாக கொண்டாடி மகிழ்ந்தனர்.