வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு வனச்சரகத்திற்கு உட்பட்ட அரவட்லா மலைப்பகுதியில் ஒரு யானை இறந்து கிடந்தது. இந்த யானையின் எலும்பு கூடு இருந்ததை பொதுமக்கள் பார்த்து விட்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். வனத்துறை அலுவலர்கள் புடை சூழ, கால்நடை மருத்துவரை வரவழைத்து சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்தனர். இந்த பிரேத பரிசோதனையில் இறந்த யானை சுமார் 7 முதல் 8 வயதுள்ள பெண் யானை என்று உறுதிபட தெரியவந்தது. இதையடுத்து தண்ணீர் அருந்த வந்த போது தவறி விழுந்து இந்த யானை இறந்திருக்க கூடும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த யானை இறந்த சம்பவம் பேரணாம்பட்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.











Leave a Reply