வேலூர், டிச. 20-
வேலூர் மாவட்டம், குடியாத்தம் செருவங்கியில் இந்திய குடியரசு கட்சி சார்பில் புரட்சியாளர் பாபா சாகேப் அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் மண்டல செயலாளர் இராசி. தலித் குமார் தலைமையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்தத் திரைப்படத்தை மாணவ, மாணவியர் மற்றும் பெரியோர்கள் வரை கண்டு களித்தனர். இந்த நிகழ்வில் பேராசிரியர் விஜயரங்கம், ஆசிரியர்கள் கோபி, திருமலை, கணேசன், தனஞ்செழியன், தம்மதேவா ,ராம்கி, குமரேசன் மற்றும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.











Leave a Reply