செய்யாறு அதிமுக., வடக்கு ஒன்றிய அலுவலகத்தில்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு !

செய்யாறு, டிச. 6 —
செய்யாறு அ.தி.மு.க., வடக்கு ஒன்றிய அலுவலகம் மற்றும் கீழ் புதுப்பாக்கம், பெருங்களத்தூர் ஆகிய பகுதிகளில், மறைந்த முன்னாள் முதல்வர்  ஜெயலலிதாவின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி அனுசரிக்கப் பட்டது. நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அ.தி.மு.க., வடக்கு ஒன்றிய அலுவலகத்தில் மற்றும் கீழ்புதுப்பாக்கம்,
பெருங்களத்தூர் ஆகிய பகுதிகளில்  முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9ம் ஆண்டு நினைவு தினம் முன்னிட்டு திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளர் தூசி மோகன் அறிவுறுத்துதலின் பேரில் செய்யாறு வடக்கு ஒன்றிய செயலாளர் மகேந்திரன் ஏற்பாட்டில்  ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

இதைத் தொடர்ந்து மலர்களால்  அலங்கரித்து வைக்கப்பட்ட முன்னாள் முதல்வர்  ஜெயலலிதாவின் திருஉருவப் படத்திற்கு செய்யாறு வடக்கு ஒன்றிய செயலாளர் மகேந்திரன் மற்றும் நிர்வாகிகள் மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட இணை செயலாளர் விமலா மகேந்திரன், ஒன்றிய அவைத் தலைவர் செபாஸ்டின் துரை,  முன்னாள் சேர்மன் பொன்.அருளானந்தம், தாமரைக்கண்ணன், பழனி, பிரகாஷ், சுதாகர், வெங்கடேஷ், கீழ்ப்பதுபாக்கம் பூபாலன், சித்திரவேல் , பெருமாள், சேகர், அண்ணாதுரை உள்ளிட்ட  பலர் கலந்து கொண்டனர்.