
வேலூர், அக்.26-
வேலூர் பழைய பேருந்து நிலையம் ,ராஜா திரையரங்க சிக்னல், மாநகராட்சி அலுவலகம் செல்லும் சாலை ,புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட வேலூர் மாநகரத்தின் பல்வேறு இடங்களிலும் மஞ்சள் நிறத்தில் பெரிய அளவில் சுவரொட்டிகள் ஆங்காங்கே ஒட்டப்பட்டுள்ளன. இந்த சுவரொட்டிகளில் “நாலு பேரும் நல்லா இருந்த ஊரும்” என்று அச்சிடப்பட்டுள்ளது. இந்த மர்ம சுவரொட்டியால் வேலூரில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. இந்த சுவரொட்டிகளை ஒட்டியது யார்? எதற்காக ஒட்டி உள்ளனர் என்பது தெரியவில்லை. யார் அந்த நாலு பேர் என்பது ரகசியமாக உள்ளது. இதுகுறித்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் தீவிர விசாரணை நடத்த காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சுவரொட்டிகள் சில ஆங்காங்கே கிழிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.










Leave a Reply