கோயம்புத்தூர் நியூ சித்தாபுதூரில் மெட்ரோ சிட்டி டெவலப்பர் என்ற நிறுவனத்தை நடத்தி வரும் முரளிதரன் மற்றும் தீர்த்தகிரி மற்றும் அவர்களுடைய ப்ராஜெக்ட் பார்ட்னர் நீரஜ் ஆகிய மூன்று நபர்களும் கூடி கோயம்புத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரியும் ரவிக்குமார் என்பவரிடம் ஒரு வழக்கில் உள்ள சொத்து குறித்து வழக்கு நடத்தி அதனை மீட்டு தர சொல்லி வந்துள்ளார்கள். அந்த வழக்கு வெற்றி பெற்ற பின் அந்த வழக்கினை நடத்திய மற்றும் வெற்றி பெற்ற வழக்கறிஞருக்கு அவருக்கு ஒப்புக்கொண்ட சேவை கட்டணத்தினை மேற்படி மூவரும் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளனர். ரவிக்குமார் வழக்கறிஞர் இது குறித்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக மெட்ரோ சிட்டி முரளிதரன் என்பவரிடம் நேரில் சென்று கேட்டு தகராறு செய்தார்.
பின்னர் போலீஸ் எடுத்த நடவடிக்கையின் பேரில் ரவிக்குமாருக்கு சேர வேண்டிய பாதி தொகையினை மட்டும் கொடுத்து மீதி உள்ள பாக்கித் தொகையினை இரண்டு ஆண்டுகளுக்குள் கொடுப்பதாக ஒப்புக்கொண்டார்கள்.
அதனை குறிப்பிட்ட நேரத்தில் கொடுக்காமல் போனதால் இது குறித்து திமுக வழக்கறிஞர் ரவிகுமார் நேரில் சென்று மீதமுள்ள கொடுக்க வேண்டிய தொகை குறித்து மெட்ரோ சிட்டி பார்ட்னர் தீர்த்தகிரி அவரிடம் கேட்கும் பொழுது போலீசார் முன்னிலையில் திமுக வழக்கறிஞர் ரவிக்குமார் பற்றி தீர்த்தகிரி அவரைப் பற்றி அறுவெறுக்கத்தக்க வார்த்தையில் பேசியும் தகாத முறையிலும் நடந்து கொண்டார். இதனை முன்னிட்டு மேற்படி திமுக வழக்கறிஞர் ரவிக்குமாரின் மீது ஒரு தவறான புகார் தீர்த்தகிரி மனைவி குமாரி மூலம் கொடுக்கப்பட்டது. இதன் முன்னிட்டு தகுந்த ஆதாரத்துடன் மேற்படி திமுக வழக்கறிஞர் கோயம்புத்தூர் காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்தன் பேரில் சம்பந்தப்பட்டுள்ள அனு பாபு என்கிற பாலகிருஷ்ணன் (அனு கேபிள் டிவி), மெட்ரோ சிட்டி டெவலப்பாரின் பங்குதாரர் தீர்த்தகிரி, பில்டிங் காண்ட்ராக்டர் பரமேஸ்வரன், மற்றும் கோவையில் இரத்த வங்கியை நடத்தி வரும் வைர மூர்த்தி ஆகியோர்கள் மேலும் சில ரவுடிகளுடன் ஒன்று சேர்ந்து ரவிகுமாருக்கு கொலை மிரட்டல் மற்றும் தகாத வார்த்தைகளை விடுத்தது குறித்து மேற்படி திமுக வழக்கறிஞர் ரவிக்குமார் கோயம்புத்தூர் காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்ததின் பேரில் குற்றவாளிகளுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை சரவணம்பட்டி காவல் நிலையத்தில் குற்ற எண் 579/2025 எண் கீழ் பதியப்பட்டுள்ளது.
மேலும் இவ்வழக்கில் முரளிதரன் மற்றும் நீரஜ் ஆகியோர் பெயரில் வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் மூலம் உத்தரவு கேட்க உள்ளதாக அறியப்படுகிறது.










Leave a Reply