வேலூர், நவ. 10-
வேலூர் மாவட்டம், காட்பாடி கிளித்தான்பட்டறை பகுதியில் புதியதாக சார் பதிவாளர் அலுவலகம் திறக்கப்பட்டது. இந்த அலுவலகம் தற்போது செயல்படவும் தொடங்கிவிட்டது. இந்த புதிய சார் பதிவாளர் அலுவலகத்தை அமைச்சர்கள் மூர்த்தி, துரைமுருகன் ஆகியோர் அண்மையில் திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த அலுவலக வளாகத்தில் இரவு நேரங்களிலும், பகல் நேரங்களிலும் லாரிகளை நிறுத்தி வைத்து இடையூறு ஏற்படுத்த வருகின்றனர் சில விஷமிகள். இதனை நிரந்தரமாக அப்புறப்படுத்துவதற்கு உண்டான வேலைகளை சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு சொந்தமான அலுவலர்கள் எடுக்கவில்லை. குறிப்பாக நமக்கு என்ன என்ற ரீதியில் அமைதியாக இருப்பதுடன், கண்டும் காணாமல் விட்டு விட்டதால் தினசரி சார் பதிவாளர் அலுவலக வளாகம் லாரி நிறுத்தும் இடமாகவே நிரந்தரமாக மாறிவிட்டது குறிப்பிடத்தக்கது. இந்த இடத்தில் லாரிகளை நிறுத்துவதற்கு நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும் என்றும், இந்த இடத்தில் லாரிகளை நிறுத்தி இயக்குவதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக இந்த பகுதி வாழ் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். ஆதலால் சார் பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் இந்த லாரிகளை நிறுத்துவதற்கு இடம் தராமல் நிரந்தரமாக தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிளித்தான்பட்டறை பகுதி வாழ் பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். காட்பாடி சார் பதிவாளர் அலுவலக அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் இந்த குற்றச்சாட்டின் மீது நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு உதவுவார்களா? அல்லது அவர்களின் கோரிக்கையை உதாசீனப்படுத்துவார்களா? என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.











Leave a Reply