வேலூர், நவ. 9-
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி, கணியம்பாடி தெற்கு ஒன்றியம், பென்னாத்தூர் பேரூராட்சி அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தனியார் நிறுவனங்கள் சார்பில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் சிறப்பு அழைப்பாளராக திமுக வேலூர் மாவட்ட செயலாளரும், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ஏ. பி. நந்தகுமார் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி மாபெரும் வேலை வாய்ப்பு முகாமை தனது திருக்கரங்களால் தொடங்கி வைத்தார். இதில் ஒன்றிய செயலாளர் கஜேந்திரன், பேரூராட்சி செயலாளர் பி.அருள் நாதன், பேரூராட்சி தலைவர் பவானி சசிகுமார், துணை தலைவர் ஜீவா,பேரூராட்சி செயலாளர் எம். ஜாகீர் உசேன், ரோட்டரி கிளப் இயக்குனர் சுரேஷ், மு.ஊ.ம.த.பாபு, ரோட்டரி சங்கர், நிர்வாகிகள், கழக தோழர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். இந்த தனியார் வேலை வாய்ப்பு முகாமில் இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்பை பெற்றனர்.












Leave a Reply