

வேலூர், நவ. 8-
திமுக தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ஆணைக்கிணங்க, வேலூர் மாவட்டம், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி, கெங்கநல்லூர் ஊராட்சி கிராமத்தில் நெடுஞ்சாலை துறை சார்பில் அப்துல்லாபுரம், ஆசானப்பட்டு, ஆலங்காயம், திருப்பத்தூர் சாலையில் ரூ.50 கோடி மதிப்பீட்டில் 8 கீ.மீ., நீளத்திற்கு நான்குவழிச் சாலை பணித் தொடக்க விழா திமுக வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் நடைபெற்றது. இதில் வடக்கு மண்டல கழக பொறுப்பாளர், திருவண்ணாமலை மாவட்டக் கழக செயலாளர், பொதுப்பணித் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி வைத்து அடிக்கல் நாட்டினார். பின்னர் சாலைப் பணிகளை கொடி அசைத்து தொடங்கி வைத்து, மரக்கன்றுகள் நட்டு வைத்தார். இதில் திமுக நிர்வாகிகள், கழக தோழர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.










Leave a Reply