மேம்பாலத்தில் வழிகாட்டு தகவல் பலகையில்
கிலோ மீட்டர் விவரம் எங்கே?


கோவை அவிநாசி சாலை உயர்மட்ட மேம்பாலத்தில் இன்று நெடுஞ்சாலைத் துறை மூலம் வழிகாட்டி தகவல் பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில் கோல்டு வின்ஸ் பகுதியில் இருந்து உப்பிலிபாளையம் வரை செல்லக்கூடிய இறங்குதலங்களில் வழிகாட்டி தகவல் பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில் கிலோ மீட்டர் விவரங்கள் எழுதப்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகளுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஆகவே உயர் மட்ட மேம்பாலத்தில் வைக்கப்பட்டுள்ள அனைத்து வழிகாட்டி தகவல் பலகையிலும் கிலோமீட்டர் தூரத்தை குறிப்பிட நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பு செயலாளர் நா. லோகு நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.










Leave a Reply