வேலூர், நவ. 7-
வேலூர் வரதரெட்டிபள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். இவரது மனைவி மோனிகா. இந்த தம்பதியரின் மகள் கீர்த்திகா( 4). பரதராமியில் உள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை பள்ளி பேருந்தில் இருந்து இறங்கி முன் பக்கமாக நடந்து சென்றார். அப்போது இதை கவனிக்காமல் அந்த பேருந்தின் ஓட்டுநர் தமிழ்ச்செல்வன் பேருந்தை இயக்கி உள்ளார். இந்நிலையில் சிறுமி அதே பள்ளி பேருந்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்த புகாரின் பேரில் பரதராமி போலீசார் வழக்குப்பதிவு செய்து பேருந்து ஓட்டுநர் தமிழ்ச்செல்வனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பாரதராமி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.











Leave a Reply