வேலூர்,நவ.6-
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம் சார்ந்த ஊராட்சியில் தெரு மின்விளக்குகள் பகல் முழுவதும் எரிந்து கொண்டிருக்கிறது. பங்களா மேடு, கள்ளிப்பேட்டை, சாத்கர், அருந்ததி மேடு போன்ற பகுதிகளில் தெரு மின்விளக்குகள் பகல் முழுவதும் எரிந்து கொண்டிருக்கிறது. இது ஒரு நாளோ, ஒரு வாரமோ, ஒரு மாதமோ அல்ல வருடக்கணக்கில் தொடர்கிறது. தமிழகத்தில் அவ்வப்போது மின் பற்றாக்குறை ஏற்படுகிறது. சாத்கர் ஊராட்சியில் சோமு என்கிற சோமசுந்தரம் ஊராட்சி செயலாளராக பணியாற்றியபோது சாத்கர் ஊராட்சியில் ஏதேனும் ஒரு பிரச்சனை என்றால் சம்பவ இடத்திற்கு உடனே நேரில் சென்று குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்வார். ஆனால் அவரது மறைவுக்குப் பிறகு பல வருடங்கள் ஆகியும் இன்னமும் நிரந்தரமாக ஒரு ஊராட்சி செயலாளர் கூட நியமிக்கப்படவில்லை. பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சாத்கர் ஊராட்சியில் இருப்பதால் நிரந்தரமான ஒரு ஊராட்சி செயலாளர் தேவை என்ற ஒரு அவசியம் ஏற்பட்டுள்ளது. பத்தலபல்லி ஊராட்சி செயலாளர் மணிவண்ணன் சாத்கர் ஊராட்சியை கூடுதலாக கவனித்து வருகிறார். அவரும் ஒரு சாதாரண மனிதன்தான். அவரைப் பிழிந்து எடுத்தால் அவர் என்ன செய்வார்?. இந்நிலையில் மூன்றாவதாக டி.டி. மோட்டூர் ஊராட்சியையும் கூடுதலாக கவனிக்கச் சொல்லி நியமித்துள்ளனர். இது ஏற்புடையதாக தெரியவில்லை. எனவே இது குறித்து ஊராட்சி ஒன்றியங்களின் இணை இயக்குநர் திருமலையும், வட்டார வளர்ச்சி அலுவலர் கு. பாரியும், சாத்கர் ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதாபிரியா சீனிவாசனும் இதில் தனிக்கவனம் செலுத்தி பகல் முழுவதும் எரியும் தெரு மின் விளக்குகளை அணைக்கவும் நிரந்தரமான ஒரு ஊராட்சி செயலாளரை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சாத்கர் ஊராட்சி பொதுமக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.











Leave a Reply