பேரணாம்பட்டு என். சிவராஜ் நகரரில் பொதுமக்களுக்கு இடையூறாக செயல்படும் ஸ்பெட்லைசர் சூறா கம்பெனி: 

வேலூர் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் சந்திரசேகரன் நடவடிக்கை எடுப்பாரா?
வேலூர்,நவ.5-
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு வி.கோட்டா சாலையில் என். சிவராஜ் நகர் பகுதியில் நெடுஞ்சாலை ஓரம் ஸ்பெட்லைஸர்  சூறா கம்பெனி ஒன்று இயங்கி வருகின்றது. மூகானே பத்துலூர் ரஹமான் என்பவருக்குச் சொந்தமான கம்பெனி இது ஏன்று கூறப்படுகிறது. என். சிவராஜ் நகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறது. இந்த பொதுமக்களுக்கு தொல்லை கொடுக்கும் வகையில் விறகுக்கு பதிலாக மாட்டுக் கழிவுகளான ஜவ்வு, சூறா போன்ற பொருட்களை கொண்டு மூகானே பத்துலூர் ரஹ்மான் அடுப்பை எரிப்பதாகவும், இதனால் இப்பகுதி குடியிருப்பு வாசிகளுக்கு மிகவும் தொல்லையாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதாவது மாட்டுக் கழிவுகளான ஜவ்வு, சூறா போன்ற பொருட்களை எரிப்பதால் மாசு கலந்த புகை வெளியேறி இப்பகுதி குடியிருப்புவாசிகளுக்கு கொசுத் தொல்லைகளும், மூச்சுத் திணறலும், வாந்தி,குமட்டல், நெஞ்செறிச்சல் ஏற்படுவதாக கூறப்படுகிறது. ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷத்தை கலந்தாலும் அந்த ஒரு குடம் பாலும் விஷமாக மாறிவிடும் என்ற கணக்காக இப்பகுதி குடியிருப்புவாசிகள் ஏழைகள் தானே, இவர்கள் நம்மை என்ன செய்யப் போகிறார்கள் என்று ஒரு அலட்சியமான எண்ணத்துடன் தொடர்ந்து மாசு கலந்த புகையை தனது கம்பெனியில் இருந்து மூகானே பத்துலூர் ரஹ்மான் வெளியேற்றுவதாகவும் தெரியவருகிறது. மனிதர்களை மூகானே பத்துலூர் ரஹ்மான் போன்ற ஒரு மனிதர் ஏமாற்றி விடலாம். ஆனால் எத்தனை கோடி ரூபாய் பணம் கொடுத்தாலும் இறைவனை ஏமாற்ற முடியாது என்றும், மனிதர்கள் உடலில் ஊசி குத்தினால்  வலி தெரியும்  என்பதைப் போல தனது கம்பெனியிலிருந்து விறகுகளுக்கு பதிலாக மாட்டு கழிவுகளான சூறாவையும், ஜவ்வுகளையும் எரிய விட்டு மாசு கலந்த புகையை வெளியேற்ற பொதுமக்களுக்கு தொல்லை கொடுப்பது ஒரு வகையான பாவம் என்பதை மூகானே  பத்துலூர் ரஹ்மான் அறிவார் . அதுபோன்ற சமயங்களில் அவரது மனசாட்சியே அவரை சுட்டிக் காட்டும். இது  நிதர்சனமான உண்மையாகும். எனவே இனிவரும் காலங்களிலாவது இதுபோன்ற பாவச் செயல்களை செய்யாமல் திருந்தி வாழ்வதே அவருக்கு நல்லது.  இந்த நிலைமை மீண்டும் தொடருமேயானால் வேலூர் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் சந்திரசேகரன் நேரில் கள ஆய்வு செய்து தக்க சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக கடந்த  15.08. 2025 சுதந்திர தினத்தன்று பேரணாம்பட்டில் செயல்படும் அனைத்து தொழிற்சாலைகளுக்கும் விடுமுறை விடப்பட்டது. இதனால் பேரணாம்பட்டில் செயல்படும் அனைத்து தொழிற்சாலைகளும் மூடப்பட்டிருந்தது. ஆனால் மூகானே பத்துலூர் ரஹ்மானுக்கு சொந்தமான ஸ்பெட்லைஸர் சூறா கம்பெனி மட்டும் விடுமுறையின்றி இயங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஒரு நடவடிக்கையும் மூகானே பத்துலூர் ரஹ்மான் மீது எடுக்கப்படவில்லை. இந்த செயல் நம் இந்திய நாட்டை அவமதிக்கும் செயலாகவும் இதை எடுத்துக் கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது. மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் இந்த பகுதிக்கு விரைந்து வந்து தனது குழுவினருடன் கள ஆய்வு செய்தால் உண்மை நிலைமை, நிலவரம் என்ன என்று தெரியவரும். அதற்குப் பிறகு அவர் சட்டரீதியான நடவடிக்கை எடுப்பதற்கு வசதியாக இருக்கும் என்கின்றனர் நன்கு விவரம் அறிந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் இந்த பகுதிவாழ் பொதுமக்கள். பொதுமக்கள் நலனில் அக்கறை கொண்டால் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் நடவடிக்கை எடுப்பார். பொதுமக்கள் எப்படியாவது போகட்டும் என அலட்சியம் காண்பித்தால் அவர் நடவடிக்கை எடுக்க மாட்டார். இதில்  அவர் நடவடிக்கை என்னவாக இருக்கும். இந்த நிறுவனம் மீது அவர் சாட்டையை சுழற்றுவாரா? என்பதையும் நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.