வேலூர் ஸ்ரீபுரத்தில் சி.டி., ஸ்கேன் மையத்தை திறந்து வைத்தார் துணை முதல்வர் உதயநிதி!

வேலூர், நவ.5-
வேலூர் ஸ்ரீபுரத்தில் உள்ள ஸ்ரீ நாராயணி மருத்துவமனை மற்றும் மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் அதிநவீன சி.டி., ஸ்கேன் மையத்தை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த புதிய வசதி வேலூர் மாவட்ட மக்களுக்கு மட்டுமின்றி அனைத்து மாவட்ட மக்களுக்கும் பயன்படும் வகையில் இருக்கும் என்று வாழ்த்துரை வழங்கி பேசினார் உதயநிதி. இந்த சி.டி, ஸ்கேன் திறப்பு விழாவில் வேலூர் எம்பி கதிர் ஆனந்த் மற்றும் வேலூர் தொகுதி எம்எல்ஏ கார்த்திகேயன், அணைக்கட்டு தொகுதி எம்எல்ஏ நந்தகுமார் மற்றும் குடியாத்தம் தொகுதி எம்எல்ஏ அமுலு விஜயன், வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா, டாக்டர் பாலாஜி மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.