

வேலூர், நவ. 4-
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அருகேயுள்ள வெட்டுவானம் அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த கலாவதி மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: எங்களுக்கு கிடைக்க வேண்டிய பாக சொத்தினை மீட்டு தரக்கோரி புகார் மனு கொடுத்தேன். புகாரில் நான் மேற்கண்ட விலாசத்தில் வசித்து வருகிறேன். என்னுடைய மாமியார் விஜயா என்பவருக்குச் சொந்தமான வீட்டுமனை வெட்டுவானம் கிராம சர்வே எண் 518 /119A, பட்டா எண் 565 ல், 0.03 சென்ட் இலவச வீட்டு மனை வழங்கப்பட்டது. என்னுடைய மாமியார் இறந்தவுடன் அவருக்கு இரண்டு பெண், இரண்டு ஆண் வாரிசுகள் உள்ளனர். என்னுடைய மாமியார் பெயரில் இருந்த சொத்து அபகரிக்கப்பட்டுள்ளது. அதாவது பெரிய மகன் மற்றும் அவருடைய தம்பி இறந்து விட்டார்கள். மேலும் பெரிய மகள் கல்யாணி ஆகியோர் ஒன்று சேர்ந்து கொண்டு அதே ஊரைச் சேர்ந்த செந்தில்குமார் மனைவி கோமதி என்பவருக்கு கடந்த 17.02. 2025 அன்று பள்ளிகொண்டா சார்- பதிவாளர் அலுவலகத்தில் ஆவண எண் 685 /20 25 விற்பனை செய்துள்ளார்கள். ஆக மொத்தம் நான்கு வாரிசுதாரர்கள் உள்ளனர். ஆனால் மீதம் உள்ள இரண்டு நபர்களுக்கு தெரிவிக்காமலும், அவர்களிடம் முறையாக கையெழுத்து பெறாமலும் பத்திரப்பதிவை திருட்டுத்தனமாக ஆவணங்களை தயார் செய்து பத்திரப்பதிவு செய்துள்ளார்கள். மீதமுள்ள எங்கள் இருவருக்கும் கிடைக்க வேண்டிய பாக சொத்தினை மீட்டுத் தரக் கோரி அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி மனு மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதிபட கூறியுள்ளார்.











Leave a Reply