பேரணாம்பட்டில் பெருகிவரும் ரேஷன் அரிசி கடத்தல்: (தனி) வருவாய் ஆய்வாளர் ஜோதி ராமலிங்கம் நடவடிக்கை எடுப்பாரா?

வேலூர்,நவ.4-
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு நகரில், வி.கோட்டா சாலையில் உள்ள கற்பகம் ரேஷன் கடைகளில் இருந்து ரேஷன் அரிசி கடத்துவோர்களுக்கு ரேஷன் அரிசி கற்பகம் ரேஷன் கடை விற்பனையாளர்களான சரண்யா, திலகவதி, மைதிலி ஆகியோர் தினமும் ரேஷன் பொருட்களை கடத்தும் பேர்வழிகளான குல்ஜார் அஹமது, சேட்டு, யூசுப், நேரு ஆகியோருக்கு ரேஷன் பொருட்களை விற்பனை செய்வது ஆதாரப்பூர்வமாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள், பத்திரிக்கையாளர்களிடம் வாய்மொழியான புகார்களைக் கூறுவதாகவும் இதுகுறித்து செய்தி வெளியிட்டால் விற்பனையாளர் சரண்யா போலீசாரையும்,  எதற்கும் உதவாத அரசியல் கட்சியைச் சேர்ந்த வெத்து வேட்டுகளையும் வைத்து மிரட்டுவதாகவும் கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் இந்த ரேஷன் கடை விற்பனையாளர்கள் சரியாக கடையை திறக்காமல் மெத்தனமாக செயல்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் குடும்ப அட்டைதாரர்கள் மிகுந்த அவதிக்கு ஆளாவதாகவும், இவர்களுக்கு ஆதரவாக, அரவாணி ஒருவர் செயல்படுவதாகவும் தெரியவந்துள்ளது. அவரும் இந்த அரிசி கடத்தல்களில் ஈடுபடுவதாகவும், குடும்ப அட்டைதாரர்கள் தரப்பில்  கூறப்படுகிறது. எனவே இது குறித்து பொதுமக்களால் மேன்மையான அதிகாரி என்று பாராட்டப்படும் வட்ட வழங்கல் அலுவலக (தனி) வருவாய் ஆய்வாளர் ஜோதி ராமலிங்கம் நேரில் ஆய்வு செய்து அது உண்மையென தெரியவரும் பட்டத்தில் தக்க துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே குடும்ப அட்டைதாரர்களின் ஒட்டுமொத்த எதிப்பார்ப்பாக மாறியுள்ளது.