
கோவையில் சிஐடியு 16-வது தமிழ்நாடு மாநில மாநாடு நவம்பர் 6 முதல் 9 வரை கோவை எஸ்.என்.ஆர். அரங்கில் நடைபெறவுள்ளது. இதன் தொடக்க நிகழ்வாக சின்னியம்பாளையம் தியாகிகள் மேடையில் தியாகிகளின் நினைவாக ஜோதிப் பயண விழா இன்று கோவையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிஐடியு மாநில செயலாளர் கே. ரங்கராஜன் தலைமையேற்றார். தியாக ஜோதியை திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் அவர்கள் ஏற்றிவைத்து தியாகிகளின் தியாகத்தையும் போராட்டப் பாரம்பரியத்தையும் நினைவுகூர்ந்தார்.
விழாவில் முன்னாள் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் சி. பத்மநாபன், சிஐடியு மாநில துணைத்தலைவர் சந்திரன் கோவை மாவட்ட சிஐடியு செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, திருப்பூர் மாவட்ட தலைவர்கள் உன்னிகிருஷ்ணன், முத்துசாமி, முன்னாள் கோவை மாவட்ட செயலாளர் வெ. ராமமூர்த்தி, சூலூர் தாலுக்கா செயலாளர் சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
மேலும் கோவை, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர் சங்க நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர்கள், கட்சி உறுப்பினர்கள் என நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று தியாகிகளை நினைவுகூர்ந்தனர்.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் உடுமலை துரையரசன் குழுவினர் தியாகிகளைப் போற்றும் பாடல்களை பாடி விழாவைத் தொடங்கினர். பின் நன்றி உரையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
தியாகிகளின் தீபம் என்றும் அணையாது – தொழிலாளர் இயக்கம் முன்னேறட்டும்!
கோசம் எழுப்பினார்கள்












Leave a Reply