வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், மெட்டுக்குளம் ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் வாழ்வாதார மையத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மெட்டுக்குளம் ஊராட்சி மன்ற தலைவி அனிதா இளங்கோவன் தலைமை வகித்தார். ஊராட்சி செயலர் சரவணன் அனைவரையும் வரவேற்று அறிக்கை சமர்ப்பித்தார். இதை தொடர்ந்து இருபதுக்கும் மேற்பட்ட தீர்மானங்களை வாசித்து அதை பொதுமக்கள் மத்தியில் ஏகோபித்த ஆதரவுடன் நிறைவேற்றினர். இதை தொடர்ந்து கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் தேநீர் விருந்து அளித்து உபசரிக்கப்பட்டது.











Leave a Reply