முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் ராக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சாதனை!

புதுச்சேரி, நவ. 1-
மாநில அளவிலான முதல்வர் கோப்பைக் கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களை ராக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தாளாளர். முகமது ஃபாரூக்  பாராட்டினார்.
தமிழ்நாடு மாநில அளவிலான முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.
போட்டியில் பெரம்பை, ராக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மாணவர்கள்  அஜய்,பாலா, சிலம்பு ஆகியோர்  கைப்பந்து போட்டியில் இரண்டாம் பரிசைப் பெற்று 8 லட்சம் ரூபாய் ரொக்கத் தொகையும் பெற்றுள்ளனர்.
மேலும் வாள் சண்டை போட்டியில் சஞ்சய் இரண்டாம் இடமும், மாநில அளவிலான பெண்கள் கேரம் விளையாட்டுப் போட்டியில் வேதியியல் துறையைச் சார்ந்த ஜெயப்பிரியா முதலிடமும் பெற்றுள்ளார்.
ஆண்களுக்கான சிலம்பம் போட்டியில் மேலாண்மையியல் துறைச் சார்ந்த தானிஷ் முதல் இடத்தையும்,வணிகவியல் துறைச் சார்ந்த சிவராமன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளுக்கு இடையேயான குத்துச்சண்டை போட்டியில் 80- 85 ராக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சார்ந்த நிஷாந்த் அவர்கள் முதலிடத்தைப் பெற்று  தங்கப் பதக்கத்தையும் வென்றுள்ளார். மேலும் ஆண்களுக்கான கைப்பந்து போட்டியில் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளனர்.  தேசிய அளவிலும், மாநில அளவிலும் பட்டங்களையும், பதக்கங்களையும்  பெற்ற மாணவர்களை ராக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர். முனைவர். உ. அன்வர் பாஷா, துணை முதல்வர் முனைவர். ஜி.செந்தில்நாதன்  வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர். மாணவர்களின் சாதனைக்குத் துணையாக தொடர்ந்து  செயல்பட்டு வரும் உடற்கல்வி ஆசிரியர்கள் இரா. வீரப்பன் மற்றும் புவனேஸ்வரி ஆகியோர்களுக்கு கல்லூரி  முதல்வரும், துணை முதல்வரும்  இப்பணி  மேலும் தொடர தங்களது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும்  தெரிவித்தனர்.