கோவை அரசு மருத்துவமனைக்கு100 பேரின்உடல் தானம் செய்து சமூகப் பொறுப்பு வெளிப்படுத்திய  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்

கோவையில்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக் குழுவின் சார்பில் 100 முன்னணி தோழர்கள் தங்கள் உடலை தானம் செய்வதாக அறிவித்து சமூகத்துக்கும் மருத்துவத் துறைக்கும் முன்னுதாரணமாக திகழ்ந்தனர்.

இந்த அரிய நிகழ்ச்சி கோவை அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. இதில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன், கோவை மாவட்ட செயலாளர்  சி. பத்மநாபன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள்  எஸ். கிருஷ்ணமூர்த்தி, கே. அஜய்குமார், வி. ராமமூர்த்தி, வி. சுரேஷ், என்.ஆர். முருகேசன், என். ஆறுச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

உடல் தான உறுதிமொழியில் கையெழுத்திட்ட 100 தோழர்களுக்கும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் நன்றி சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

மருத்துவத்துறைக்கு உடல் தானத்தின் பயன்

மனித உடல் தானம் என்பது மரணத்திற்குப் பின் கூட மற்றவர்களுக்கு வாழ்வளிக்கும் உன்னதமான செயல். தானமாக பெறப்படும் உடல்கள்,

மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களுக்கு மனித உடல் அமைப்பை நேரடியாகக் கற்றுக் கொள்ள உதவுகின்றன.

அறுவைச் சிகிச்சை பயிற்சிகள் மற்றும் மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு அடிப்படை ஆதாரமாக அமைகின்றன.

நோய்களின் பரவல், உடல் உறுப்புகளின் செயல்பாடு, புதிய சிகிச்சை முறைகள் ஆகியவற்றை அறிவியல் ரீதியில் ஆராய இதுவே முக்கிய வாய்ப்பாகும்.

இதன் மூலம் புதிய தலைமுறை மருத்துவர்கள் துல்லியமான அறிவும் திறனும் பெறுகிறார்கள். எனவே உடல் தானம் என்பது ஒரு நபரின் மரணத்திற்கு அப்பாற்பட்ட அறிவியல் மற்றும் மனிதநேயப் பங்களிப்பு ஆகும்.

“சமூகத்துக்காக வாழ்ந்தும், மரணத்திற்குப் பிறகும் சேவை செய்யும் மார்க்சிஸ்ட் தோழர்கள்”

நிகழ்வில் பேசிய கோவை  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  பி.ஆர். நடராஜன்,

“மனித உடல் தானம் என்பது கட்சியின் மனிதநேயக் கொள்கையின் நீட்சியாகும். மரணத்திற்குப் பிறகும் சமுதாயத்திற்குச் சேவை செய்வது என்பது மார்க்சிஸ்ட் தோழர்களின் பெருமை. இதை மற்றவர்கள் பின்பற்றினால் சமூக ஒற்றுமையும் அறிவியல் வளர்ச்சியும் வலுவாகும்,”
என்று கூறினார்.

மாவட்டச் செயலாளர் சி. பத்மநாபன் கூறியதாவது

சுகாதாரத் துறையில் ஆராய்ச்சி முன்னேறுவதற்கான அடிப்படை உதவியாக உடல் தானம் திகழ்கிறது. இந்த முயற்சி கோவையிலிருந்து தொடங்கி தமிழகமெங்கும் விரிய வேண்டும்,”
என்றார்.

“வாழ்க்கைக்குப் பின் அறிவியலுக்காக வாழும் மனிதர்கள்”

நிகழ்வில் கலந்து கொண்ட 100 தோழர்களும் தங்கள் உடலை தானம் செய்வதன் மூலம் “மரணத்திற்கு பின் கூட மனித குலத்திற்கு பயன்படும் வாழ்வு” என்பதைக் காட்டி உண்மையான மார்க்சிஸ்ட் நெறியை வெளிப்படுத்தினர்.

கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் இதனை பாராட்டி கூறியதாவது

ஒவ்வொரு தானமும் மருத்துவ மாணவர்களுக்கு நூற்றுக்கணக்கான புத்தகங்களுக்குச் சமமான அறிவை அளிக்கிறது,”
என்றனர்.

சமூகச் சேவையும் அறிவியலும் இணைந்த இந்த நிகழ்வு,
கோவை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றில் மறக்க முடியாத மைல்கல்லாக அமைந்துள்ளது.