வேலூரில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் கூட்டம்: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு!

வேலூர், அக். 30-
வேலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் பணி 2026 அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி  தலைமையில் நடைபெற்றது. இதில் திமுக சார்பில் வேலூர் மாவட்ட செயலாளர்  மற்றும் அணைகட்டு தொகுதி எம்எல்ஏவுமான ஏ.பி.நந்தகுமார் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கலந்து கொண்டு சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் பணி குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினார். இதில் மாவட்ட அவைத்தலைவர் தி.அ.முகமது சகி,  மாவட்ட துணை செயலாளர் அரசு, துணை செயலாளர் முன்னா ஷெரிப், பொருளாளர் சிட்டி பாபு மற்றும் அதிமுக சார்பில் வேலூர் மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே. அப்பு, வேலூர் மாநகர காங்கிரஸ் மாவட்ட தலைவர் டீக்காராமன்,ன
பாஜக, விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரேம் குமார், 
அனைத்து கட்சிகளின் மாவட்ட செயலாளர்கள்,மாநகர செயலாளர்கள்,துணை செயலாளர்கள், பல்வேறு அரசு துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.