
வேலூர், அக்.30-
ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு 8 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம், காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை சோதனைச் சாவடியில் கலால் பிரிவு போலீஸார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆந்திர மாநிலம், திருப்பதியில் இருந்து விழுப்புரம் வரை செல்லும் தமிழக அரசுப் பேருந்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த அரசுப் பேருந்தில் 8 கிலோ கஞ்சா கடத்தி வந்த இளைஞரை கைது செய்தனர். அந்த இளைஞர் கடத்தி வந்த 8 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.











Leave a Reply