வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் கால்வாய் சீரமைக்கும் பணி தொடக்கம்!

வேலூர் நேதாஜி மார்க்கெட்டில்  கால்வாய் சீரமைக்கும் பணி தொடங்கியது.
வேலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், திமுக மாநகர செயலாளருமான
ப.கார்த்திகேயன் வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் கள ஆய்வு செய்தார். அதில் கால்வாய் சீரமைக்கும்  பணி எப்படி நடக்கிறது என எம்எல்ஏ ப. கார்த்திகேயன் ஆய்வு மேற்கொண்டார். விரைவாக பணிகளை முடிக்க வேண்டும். அத்துடன் பணிகள் தரமாக இருக்க வேண்டும் என்றும் அவர் ஒப்பந்ததாரருக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வு பணியின் போது எம்எல்ஏவுடன்
மண்டல தலைவரும், மாமன்ற உறுப்பினருமான
வீனஸ் ஆர். நரேந்திரன்,
மாமன்ற உறுப்பினர்கள்
வி. எஸ். முருகன்,
காசு சண்முகம்,
பகுதி கழக செயலாளர்
வி. ஜி. கே. சுந்தர்விஜய், ஜெயகாந்தன் மற்றும் மாநகராட்சி உதவி பொறியாளர் மற்றும் வியாபாரிகள், பொதுமக்கள் உடன் இருந்தனர்.