காட்பாடி அடுத்த சேனூர் பெரியார் நகரில் மக்கள் நடமாட முடியாமல் அச்சம்: இருசக்கர வாகனங்களில் செல்வோர் உயிரை பணயம் வைக்கும் அவலம்!

வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், சேனூர் ஊராட்சி பெரியார் நகரில் சுமார் 200 குடும்பங்கள் வசிக்கின்றனர். இந்த பெரியார் நகருக்கு அடிப்படை வசதிகளான குடிநீர், தெரு விளக்கு, சாலை வசதி ஆகியவற்றை ஊராட்சி நிர்வாகம் செய்து தராமல் இருட்டடிப்பு செய்து வருகிறது. இந்த அவல நிலைக்கு காரணமே சேனூர் ஊராட்சியின் செயலர் நீலமேகம்தான் என்று சொன்னால் அது மிகையாகாது. அவர் மட்டும் அவரது வீட்டிற்கு சிமெண்ட் சாலை அமைத்துக் கொண்டார். குடிதண்ணீர் வசதி, தெரு மின்விளக்கு வசதி என அடிப்படை வசதிகள் அனைத்தையும் ஏற்படுத்திக் கொண்டார். மற்ற பகுதிகளை அவர் திரும்பிக் கூட பார்ப்பதில்லை. இந்த நிலை கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நீடித்து வருகிறது என்று சொல்கின்றனர் பெரியார் நகர் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் என்று சொன்னால் அதுதான் நிதர்சன உண்மை. . அப்படியும் மீறி மழை காலங்களில் இந்த பெரியார் நகரில் சாலைகளில் நடந்து கூட செல்ல முடியாத அளவிற்கு மிகவும் மோசமான நிலையில் இருந்ததை சுட்டிக்காட்டி சாலை அமைத்து தருமாறு கேட்டால், நீங்கள் எங்கு வேண்டுமானாலும் போய் சொல்லிக் கொள்ளுங்கள், நிதி இல்லை என்று ஒரே பதிலை சொல்லிக்கொண்டு ஐந்து ஆண்டுகளை காலம் கடத்தி வந்துள்ளார் இந்த ஊராட்சி செயலர் நீலமேகம். இங்கு இவர் வைத்தது தான் எழுதப்படாத சட்டம் போன்று செயல்படுகிறது. யார் இவரிடம் சென்று கேள்வி கேட்டாலும் இவர் எரிந்து விழுவது, அவர்களிடம் வீண் தகராறு செய்வது என்று இவரது மனம் போன போக்கில் நடந்து கொள்கிறார். இவர் ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவர் போல இந்த பகுதியில் இருந்து வருகிறார் என்று பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது. மக்களுக்கு தேவையானதை செய்து தர அரசு நியமித்த ஒரு அரசு ஊழியர் இப்படி தான் தோன்றித்தனமாக நடந்து கொள்கிறார் என்பது வேதனயிலும் வேதனை என்கின்றனர் இந்த பகுதி வாழ் மக்கள். அரசுக்காக மக்களா? மக்களுக்காக அரசா?என்பதை இந்த ஊராட்சி செயலர் நீலமேகம் தான் பொதுமக்களுக்கு விளக்க வேண்டும். இவரை காட்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி மன்ற தலைவியோ என யாரும் தட்டிக் கேட்பதே கிடையாது. அதனால் அவர் தனது விருப்பம் போல் செயல்படுகிறார். இவர் வைத்ததுதான் சட்டம் என்று இன்றுவரை அதே நிலை தொடர ஆரம்பித்து விட்டது. முதல்வர் ஸ்டாலின் முகாமில் கூட அவர் என்ன சொல்கிறாரோ அதுதான் என்ற நிலை தொடர்ந்து நிலவி வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அவற்றை குப்பையில் வீசியுள்ளார் நீலமேகம் என்று சொன்னால் அதுதான் உண்மையிலும் உண்மை. இப்படி அரசு பணியை அலட்சியமாக, தான் தோன்றித்தனமாக நடத்தும் இந்த அரசு ஊழியர் மீது துறை ரீதியான விசாரணை நடத்தி அது உண்மையென தெரியவரும் பட்சத்தில் அவரை நிரந்தரமாக பணிநீக்கம் செய்ய வேண்டும் என்பதே சேனூர் பகுதி வாழ் பொதுமக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக மாறியுள்ளது. இனி நீலமேகத்தின் மீது அரசு என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.