கோமா நிலையில் செயல்படும் பேரணாம்பட்டு நகராட்சி:

வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி நடவடிக்கை எடுப்பாரா?
வேலூர், அக். 27-
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு நகராட்சியில் 21-வார்டுகள்  உள்ளன. இந்த 21-வார்டுகளில், 2-3-21-போன்ற வார்டுகளில் பகல் முழுவதும் தெரு மின் விளக்குகள்  எரிகின்றது. இதனால் மாதாமாதம் பல லட்ச ரூபாய் தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு  ஏற்படுவதாகவும், ஒரு சில நகர மன்ற உறுப்பினர்களின் மெத்தனப் போக்கால் இதுபோன்ற வீண்விரயங்கள் ஏற்படுகிறது.  பேரணாம்பட்டைச் சுற்றியுள்ள பெரும்பாலான முக்கிய சாலைகளில் ஊர் பசுக்கள் கட்டுப்பாடின்றி  சுற்றித் திரிகின்றன. சில இடங்களில் சாலைகளின் நடுவே பசுக்கள் கூட்டமாக படுத்துக் கொண்டு பொதுமக்கள் நிம்மதியை இழக்கச் செய்கின்றன. இதனால் நகரில் போக்குவரத்து இயக்கம் என்பது மிகவும் இடையூறாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது. நகராட்சியில் பணிபுரியும் எந்த அதிகாரிகளுக்கும் எதைப்பற்றியும் கவலை இலாலை. யார்வீட்டு இழவோ பாய் போட்டு அழுகிறது என்ற ரீதியில் பணியாற்றுகின்றனர். மாத ஊதியம் வாங்கிச்  செல்வதில், மட்டுமே குறியாக  இருக்கிறார்களே தவிர தாங்கள் வாங்கும் ஊதியத்துக்கு ஏற்றார்போல பணிபுரிவதில்லை. பேர்ணாம்பட்டு நகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் ஏதோ கடமைக்கு வேலை செய்வது போல் தோன்றுகிறது. இவர்கள் தங்களது கடமை, பொறுப்புணர்வு ஆகியவற்றை மறந்து கோமா நிலையில் பணியாற்றுவது வெட்ட வெளிச்சமாக தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படி மாத ஊதியம் மட்டும் பெற்றுச் செல்லும் அரசு அலுவலர்களின் குடும்பங்கள், நிம்மதியாக வாழ முடியாது என்று பொதுமக்கள் தரப்பில்  கூறப்படுகிறது. இதுகுறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி கள ஆய்வு செய்து தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது துறை ரீதியான கடும்  நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பதே பேரணாம்பட்டு வாழ் பொதுமக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக மாறியுள்ளது. பேர்ணாம்பட்டு நகராட்சி மீது மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி சாட்டையை சுழற்றுவரா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.