வேலூர், அக். 27-
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி, பள்ளி கொண்டா பேரூராட்சி அலுவலகத்தில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது.
இதில் திமுக வேலூர் மாவட்ட செயலாளரும், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ஏ. பி. நந்தகுமார் கலந்து கொண்டு பேரூராட்சி பகுதியில் உள்ள வார்டுகளில்
அம்ருத் திட்டப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் வார்டு கவுன்சிலர்களிடம் உங்கள் பகுதியில் என்னென்ன குறைகள் உள்ளன என்று கேட்டறிந்தார். இதில் வேலூர் மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர் மு.பாபு, பேரூராட்சி தலைவர் சுப்பிரியா, ஒன்றிய செயலாளர் எஸ்.வெங்கடேசன், கோ.குமரபாண்டியன், பேரூராட்சி செயலாளர் எம்.ஜாஹுர் ஹூசேன், துணைத் தலைவர் வாஸிம், வார்டு கவுன்சிலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர், அம்ருத் திட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.












Leave a Reply