

குன்னத்தூரில் நட்சத்திர அவென்யூ பகுதியில் சுமார் 70 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு பொது பயன்பாட்டுக்கு என ரிசர்வ் சைட் ஒதுக்கப்பட்ட இடத்தில் மக்களின் நீண்ட கால கோரிக்கையான மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டி கட்டுவதற்குப் பதிலாக கோவில் கட்டும் பணி தொடங்கியுள்ளனர்.
இது சம்பந்தமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி மோகன் ஸ்ரீ வத்சவா மற்றும் நீதிபதி அருள் முருகன் ஆகியோர் ஊரக வளர்ச்சித் துறை ஆணையாளர், கலெக்டர், அன்னூர் பிடிஓ உள்ளிட்ட ஐந்து அதிகாரிகள் 4 வாரங்களுக்குள் உரிய பதிலளிக்க வேண்டும் என்றும், அதுவரை எந்தக் கட்டுமான பணியும் நடைபெறக் கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து கோவில் கட்டுமான பணிக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் உயர் நீதிமன்ற உத்தரவை மதிக்காத வகையில் அன்னூர் பிடிஓ செயல்படுவதாக கூறப்படுகிறது.
இதனால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை பாயலாம் எனவும் பேசப்படுகிறது.











Leave a Reply