வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காட்பாடி 1வது மண்டலம், 7வது வார்டு வி.ஜி.ராவ் நகர். இந்த நகரில் தொடக்கப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. காட்பாடி பகுதியில் தினமும் கன மழை பெய்வதால் இந்தப் பகுதியில் மழை நீர் தேங்கி குளம் போல் நின்றது. இதனால் பள்ளி மாணவ, மாணவிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாயினர். இந்நிலையில் வேலூர் மாநகராட்சி காட்பாடி 1வது மண்டலத்துக்கு உட்பட்ட சுகாதார அலுவலர் டாக்டர் சிவக்குமார் தலைமையில், சுகாதார ஆய்வாளர் வனிதா மற்றும் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் விரைந்து வந்து அந்தப் பள்ளியில் தேங்கி நின்ற மழை நீரை மூலம் அப்புறப்படுத்தினர். இதையடுத்து அந்த பகுதியில் கொசுக்கள் பரவாமல் இருப்பதற்காக கொசு மருந்தும் தெளித்தனர்.










Leave a Reply