வேலூர் அரியூர் பகுதியில் தேங்கியுள்ள மழை நீரை பார்வையிட்டு ஆய்வு செய்த எம்எல்ஏ நந்தகுமார்!

வேலூர், அக். 24-
திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான தங்கத்தளபதி மு. க. ஸ்டாலின் ஆணைக்கிணங்க, வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில்,
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி, வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அரியூர் கிருபா நகர், திருவள்ளுவர் நகர் ஆகிய பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து உள்ளது. குறிப்பாக மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகம் காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் நடமாட அச்சம் தெரிவிக்கின்றனர். இதனால் மாலை 5 மணிக்கு மேல் யாரும் நிம்மதியாக நடந்து செல்ல முடியவில்லை.

இதையடுத்து திமுக வேலூர் மாவட்ட செயலாளரும், அணைக்கட்டு தொகுதி எம்எல்ஏவுமான ஏ.பி.நந்தகுமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து மாநகராட்சி அதிகாரிகளை அழைத்து ஜேசிபி இயந்திரம் மூலம் நீரை வெளியேற்ற உத்தரவிட்டார். இதில் வேலூர் வட்டாட்சியர் இல. வடிவேலு, மாநகராட்சி மேயர் சுஜாதா, பகுதி செயலாளர் ஆர். கே.ஐயப்பன், மண்டல குழு தலைவர் எஸ்..வெங்கடேசன், அவைத்தலைவர் ரவி, வட்ட செயலாளர் ஏழுமலை, ரசூல், மாநகராட்சி இளநிலை பொறியாளர் மற்றும் அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள், கழக தோழர்கள் உடன் இருந்தனர்.