டி.டி. மோட்டூர் ஊராட்சியில் நடைபெறும் தில்லு முல்லு வேலைகள்: பிடிஓ கு.பாரி நடவடிக்கை எடுப்பாரா?

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம், டி.டி.மோட்டூர் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் சி.அமிலா. ஆனால் அமிலா தன்னுடைய அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து தன்னுடைய கணவரான யுவராஜ் என்கிற சிவாஜியை முன்னிறுத்தி அனைத்து வேலைகளையும் செய்யச் சொல்கிறார். பல்வேறு தேவைகளுக்காக அமிலாவை தேடிவரும் பொதுமக்கள் அவரைக் காணாமல் ஏமாந்து திரும்பிச் சென்ற வண்ணமாக உள்ளனர். அப்படியாக ஏமாந்து திரும்பி வரும் பொதுமக்களை அமிலாவின் கணவரான யுவராஜ் தடுத்து நிறுத்தி இங்கு நான்தான் ஊராட்சி மன்ற தலைவர் என்றும், எனது மனைவி அமிலா ஒரு டம்மி பீஸ் என்றும் உங்களுடைய தேவை எதுவானாலும் என்னிடம் சொல்லுங்கள் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறி பொதுமக்களை மிரட்டி அனுப்புவதாக பொதுமக்கள் கதைகதையாக கூறுகின்றனர்.

ஊராட்சி மன்ற தலைவி அமிலா, ஷூ கம்பெனிக்கு வேலைக்குச் செல்வதாகவும், இப்படி ஷூ கம்பெனிக்கு வேலைக்கு செல்லும் ஒருவருக்கு ஊராட்சி மன்ற தலைவர் பதவி தேவைதானா? என்றும் அப்படியே ஒரு சில தேவைகளுக்காக பொதுமக்கள், அமிலாவின் கணவர் யுவராஜிடம் சென்றால் குடிபோதையில் அவர் மயக்கத்தில் பொதுமக்களை கண்டபடி திட்டுவதாகவும் சிந்தகணவாய் கிராமத்தில் துப்புரவு தொழிலாளர்களை தெருக்களை சுத்தம் செய்ய அனுப்புவதே இல்லை என்றும் புகார்கள்அடுக்கடுக்காக கூறப்படுகிறது. இதுகுறித்து இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் போய் தட்டிக்கேட்டால், நான் என்ன உங்கள் வீட்டு வேலைக்காரனா? ஊராட்சி மன்ற தலைவரான என் மனைவி அமிலா உங்கள் வீட்டு வேலைக்காரியா? என்றும் கேட்கிறாராம். தெருவில் சேகரமாகியுள்ள குப்பைகளை நீங்களே வாரிக் கொள்ளுங்கள் என்று கூறுகிறார். இதுகுறித்து மீண்டும் என்னிடம் பேசினால் உங்களை நான் அசிங்கமாக தரக்குறைவான வார்த்தைகளை கூறி திட்டிவிடுவேன் என்று கூறியதாகவும் கூறப்படுகிறது. ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஜெயலட்சுமி யுவராஜ் நடுராத்திரியில் சென்று எங்களது குறைகளை சொன்னால் உடனே நிவர்த்தி செய்து தருவதாகவும், ஊராட்சி மன்ற நிர்வாகத்தில் செய்யாத வேலைகளுக்கெல்லாம் பொய்யான கணக்குகளைக் காட்டி தமிழக அரசின் பல லட்சம் ரூபாயை, ஊராட்சி மன்ற தலைவர் அமிலாவின் கணவர் யுவராஜ் மோசடி செய்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக தெரியவந்துள்ளது. டி.டி.மோட்டூர் ஊராட்சியில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தால், உண்மை நிலவரம் தெரியவரும் என்று பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது. எனவே அதிகாரிகள் இந்த பிரச்னையை உரிய முறையில் விசாரணை நடத்தி யுவராஜ் மீது சட்ட நடவடிக்கை எடுப்பார்களா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.